தமிழ்நாடு

“கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளும் நடவடிக்கைகளும்” - சென்னை மாநகராட்சி

“கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளும் நடவடிக்கைகளும்” - சென்னை மாநகராட்சி

webteam

சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய 523 இடங்களில் 68 இடங்களில் நீர் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் நிலைகொண்ட புயல் கரையை கடந்துள்ள நிலையில், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி தெரிவித்துள்ள தகவலில், “சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள  22 சுரங்கப் பாதைகளில் 13-ல் மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னையில் சென்னையில் இன்று ஒரே நாளில் விழுந்த 116 மரங்களும் அகற்றப்பட்டுள்ளது. 

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 13,847 புகார்களில் 5,506 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 68 முகாம்களில் 2,249 பேர் தங்கியுள்ளனர்.

இன்று பிற்பகல் வரை  சென்னை மாநகராட்சி முழுவதும் 7 லட்சம் பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களில் பொதுமக்களை மீட்பதற்காக 48 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மழைநீர் அகற்றும் பணியில் 508 மின் மோட்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.