செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் கண்டிப்பாக அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
விபத்துக்களை குறைப்பது தொடர்பாக சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின், அவர் இதை தெரிவித்தார்.
மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டியது, போக்குவரத்து விதிகளை மீறியது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 9500 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட பின்பும் அவர்கள் நகல் உரிமங்களை காட்டி தப்பித்து விடுவதாகவும், அதை தடுக்கவே வாகனம் ஓட்டும் போது அசல் ஓட்டுநர் உரிமங்களை கட்டாயமாக்குவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.