தமிழ்நாடு

வேட்பாளர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய உத்தரவு

வேட்பாளர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய உத்தரவு

webteam

குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் பற்றிய விவரங்களை நாளேடுகளில் விரிவாக விளம்பரப்படுத்துவதை உறுதி செய்யும்படி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் எழுதியிருக்கும் கடிதத்தில், உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் உரிய விளக்கங்களையும் உத்தரவுகளையும் பிறப்பிக்குமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை மாநிலத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைமை அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும்படியும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் வேட்பாளர்கள் தங்கள் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்த விவரங்களை செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து அதனை சீலிடப்பட்ட உறையில் தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டு்ம் எனவும் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது