அதிமுகவில் இரட்டைத் தலைமை காரணமாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட பிரச்னையில் ஓ. பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சூழலில், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கும் வகிக்கும் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக கொடியில் உள்ள சின்னத்தை போன்று அண்ணா உள்ள இடத்தில் எம்ஜிஆரையும், இரட்டை இலை சின்னத்திற்குப் பதிலாக பலாப்பழம் சின்னத்தையும் பொருத்தி சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் இதே தேர்தல் சின்னத்துடன் புதிய கட்சி தொடங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.