கொரோனா பொது முடக்க தளர்வுகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிற்பகலில் நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்திலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கபோவதில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை நடத்திய ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் அவரது வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிற்பகலில் நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்திலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கபோவதில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. ஓபிஎஸ் சொந்த ஊரான தேனிக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோருடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நேற்று அதிமுக செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் குறித்து காரசார விவாதம் நடந்த சூழலில் இன்று ஆலோசனை நடைபெறுவது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு தெரியும் என அதிமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.