தமிழ்நாடு

'வரியை உயர்த்தினாலும் மத்திய அரசு மாநிலத்திற்கான பங்கை தருவதில்லை' பட்ஜெட் உரையில் ஓபிஎஸ்

'வரியை உயர்த்தினாலும் மத்திய அரசு மாநிலத்திற்கான பங்கை தருவதில்லை' பட்ஜெட் உரையில் ஓபிஎஸ்

Sinekadhara

பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி வருவாயில் இருந்து மாநிலத்திற்கு உரிய பங்கு கிடைப்பதில்லை என்று ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், வரியை உயர்த்தினாலும் பங்கை தருவதில்லை மத்திய அரசு மாநிலங்களுக்கு உரிய பங்கைத் தருவதில்லை என்று குற்றம்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து, “நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள நிதிப் பற்றாக்குறையை தவிர்க்க இயலாது. பொருளாதாரத்தில் எந்தவொரு பாதகமான தாக்கமும் ஏற்படாமலிருக்க பற்றாக்குறையை குறைக்க வேண்டும். 14வது நிதிக்குழு பரிந்துரைத்த மானியங்களை தாமதமின்றி வழங்க வேண்டும். 15வது நிதிக்குழு மானியத்தை கூடுதல் நிபந்தனைகளை விதிக்காமல் உடனே விடுவிக்க வேண்டும்” என்று ஒபிஎஸ் பேசினார்.