Annamalai pt desk
தமிழ்நாடு

தருமபுரி: “10,000 பேர நான் இறக்கி காட்டவா” முற்றுகையிட்ட மக்கள்; ஆவேசமான அண்ணாமலை

பொம்மிடி அருகே லூர்து மாதா அன்னை ஆலயத்திற்கு வந்த, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை உள்ளே வரக்கூடாது எனக் கூறி, இளைஞர்கள் முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

webteam

தருமபுரி மாவட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நடைபயணம் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. இதற்காக மேட்டூரிலிருந்து நேற்று மாலை பொம்மிடி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு அண்ணாமலை வந்தார்.

அப்போது அவர் வரும் வழியில் பொம்மிடி அடுத்த பி.பள்ளிப்பட்டியில் உள்ள லூர்து அன்னை மேரி தேவாலயத்திற்கு அண்ணாமலை சென்றார். இதைத் தொடர்ந்து லூர்து அன்னைக்கு மாலை அணிவிக்கச் சென்ற அவரை, அங்கிருந்த கிறிஸ்தவ இளைஞர்கள் சிலர், உள்ளே வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

youths

முதலில் அவர்களுக்கு விளக்க முயன்ற அண்ணாமலை, பின் ஆவேசமானார். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின.

தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

பின்னர் அண்ணாமலை லூர்து மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பாப்பிரெட்டிப்பட்டி நோக்கிச் சென்றார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.