தமிழ்நாடு

மக்கள் பயன்பாட்டிற்கு வந்தன வண்டலூர், பல்லாவரம் மேம்பாலங்கள்..!

மக்கள் பயன்பாட்டிற்கு வந்தன வண்டலூர், பல்லாவரம் மேம்பாலங்கள்..!

webteam

சென்னையில் வண்டலூர் மற்றும் பல்லாவரம் மேம்பாலங்களை முதலமைச்சர் பழனிசாமி நேரில் கொடியசைத்து திறந்து வைத்தார்.

சென்னை வண்டலூரில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில், 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வண்டலூர் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நிறைவு பெற்றன. செப்டெம்பர் 2016ம் தேதி தொடங்கிய பணிகள், 4 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவு செய்யப்பட்டுள்ளது. 711 மீட்டர் நீளம், 23 மீட்டர் அகலம் கொண்ட 6 வழி சாலை மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.

சென்னை ஜிஎஸ்டி சாலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே கட்டப்பட்டுள்ள வண்டலூர் மேம்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

அதேபோல், பல்லாவரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏப்ரல் 2016ம் ஆண்டு மேம்பாலம் பணிகள் தொடங்கப்பட்டது. 1.53 கிமீ நீளம் கொண்ட மேம்பாலம் 82.66 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இப்பாலம் ஒரு வழி போக்குவரத்தை கொண்டது. இந்த பாலத்தையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “வண்டலூர் மேம்பாலம் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருந்தது, அவை களைந்து தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. பல்லாவரம் மேம்பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 81 கோடி ரூபாயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 93.50 கோடிசெலவில் கோயம்பேடு மேம்பாலம் 75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. டிசம்பர் 2020ல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்” எனத் தெரிவித்தார்.