தமிழ்நாடு

தமிழகத்தில் திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி

தமிழகத்தில் திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி

Rasus

தமிழகத்தில் திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கி முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இதுவரை திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. அதேசமயம் அரங்குகளில் அரசியல், மத கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ டிசம்பர் 19-ஆம் தேதி முதல் திறந்தவெளியில் அரசியல், மத, கலாசார பொழுதுபோக்கு கூட்டங்கள் நடத்தலாம். தனிமனித இடைவெளியை பின்பற்றி 50 சதவீத பங்கேற்பாளர்களுடன் கூட்டங்களை நடத்திக்கொள்ளலாம். அதேசமயம் மாவட்டங்களில் ஆட்சியர்களிடமும், சென்னையில் மாநகர காவல் ஆணையரிடமும் அனுமதி பெறுவது அவசியம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.