சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் 8,991 கொரோனா நோயாளிகளில் 17 பேர் மட்டுமே வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட 24 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில் 60% பேர் மருத்துவமனைகளிலும், சிலர் கொரோனா சிகிச்சை மையம் மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர்.
எனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருபவர்களில் விருப்பமுள்ளவர்கள் வாக்களிக்க குறிப்பிட்ட நேரத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் 8,991 பேர்களில் 17 பேர் மட்டுமே வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.