வெங்காயம் pt web
தமிழ்நாடு

நாடு முழுவதும் உச்சத்தை நோக்கி வெங்காயத்தின் விலை.. கவலையில் மக்கள்! காரணம் என்ன?

நாடு முழுவதும் பல நகரங்களில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வாடிக்கையாளர்களை கவலையடையச் செய்துள்ளது.

PT WEB

மொத்த சந்தைகளில் வெங்காயத்தின் விலை தரத்தைப் பொறுத்து 70 முதல் 80 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. டெல்லியைப் பொறுத்தவரை வெங்காயத்தின் விலை தற்போது கிலோவுக்கு சராசரியாக 80 ரூபாயாக உள்ளது. மும்பை சந்தைகள் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. சென்னை மொத்தவிலை காய்கறி சந்தையான கோயம்பேட்டிலும், வெங்காயம் விலை அதிகரித்தே காணப்படுகிறது

சின்ன வெங்காயம் விலையும், 60 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நான்கு நாட்களில் வெங்காயத்தின் விலை 21% அதிகரித்துள்ளது. கனமழையால் பயிர்கள் சேதம், அறுவடை தாமதம் காரணமாக இந்தியாவில் வெங்காயத்தின் விலை ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.

கோயம்பேட்டை பொறுத்தவரை, கேரட் கிலோ 50 ரூபாய், பீட்ரூட் 80 ரூபாய், பட்டாணி கிலோ 170 ரூபாய், இஞ்சி 170 ருபாய், பூண்டு 360 ரூபாய் என அதிக விலைக்கு விற்கப்படுகிறது. நாடு முழுவதும், சமையல் எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளதால் குடும்பங்களின் பொருளாதார சுமை கூடியுள்ளது.