மழை PT web
தமிழ்நாடு

சென்னையில் விடாமல் பெய்யும் கனமழை | மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்துவரும் நிலையில், மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருக்கும் நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் அதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழையானது இன்னும் நிற்காமல் பெய்தபடியே இருந்துவருகிறது. இன்றிரவு முழுவதும் மேகம் வலுவடைந்து அதி கனமழை இருக்கும் என கூறப்படும் நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு முதலிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மழை

இந்நிலையில் மழையின் காரணமாக சென்னையில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..

சென்னை பெரிய மேடு பகுதியில் மின்சாரம் தாக்கி பீகாரைச் சேர்ந்த அகமது சையது (55) என்பவர் உயிரிழந்துள்ளார். ஸ்விட்ச் பாக்ஸை தொட்டபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பீகாரைச் சேர்ந்த இவர் கடந்த 10 ஆண்டுகளாக பெரிய மேடு இ.கே குரு தெருவில் சொந்தமாக லெதர் பேக் தைக்கும் கடை நடத்தி வந்துள்ளார்.

வெளியில் சென்று விட்டு கடைக்கு வந்து சையது சுவிட்சை போட்ட போது மின்சாரம் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக பெரிய மேடு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.