தமிழ்நாடு

சிங்கம்புணரி மஞ்சுவிரட்டு - மாடு முட்டி பார்வையாளர் சம்பவ இடத்தில் பலி

சிங்கம்புணரி மஞ்சுவிரட்டு - மாடு முட்டி பார்வையாளர் சம்பவ இடத்தில் பலி

Sinekadhara

சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் பார்வையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் மாசி மகாமகத்தை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டு போட்டிக்கு சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. வாடிவாசலில் அவிழ்த்துவிட 120 காளைகள் மட்டுமே பதிவாகி இருந்த நிலையில், அதற்கு முன்பே ஆங்காங்கே 300ற்கும் மேற்பட்ட கட்டு மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.

மாடுகள் சீறிப்பாய்ந்து சென்று முட்டியதில், பார்வையாளராக வந்திருந்த கீழையூரை சேர்ந்த சுந்தரம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 80 பேர் காயமடைந்த நிலையில், 16 பேர் படுகாயங்களுடன் புதுக்கோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த மஞ்சுவிரட்டை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடி கண்டு ரசித்தனர்.