ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்கு வரும் 31 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் " ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி திங்கள்கிழமை சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேற்படி உள்ளு்ர் விடுமுறைக்கு பதில் செப்டம்பர் 9 ஆம் தேதி சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்ளுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுவதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.