தமிழ்நாடு

புத்தாண்டையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்

புத்தாண்டையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்

webteam

புத்தாண்டையொட்டி ‌31‌ஆம் தேதி இரவு சென்னை மாநகரின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள அனைத்து வழிகளும் இரவு 8 மணிக்கு அடைக்கப்பட்டு, உள்ளே நிற்கும் வாகனங்கள் அனைத்தும் கலங்கரை விளக்கத்திற்கு பின்புறமாக வெளியே விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை 31ஆம் தேதி இரவு 8 மணி முதல், மறுநாள் அதிகாலை 4 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை மற்றும் வாலாஜா முனை சந்திப்பில் இருந்து போர் நினைவு சின்னம் நோக்கி வரும் வாகனங்கள் கொடிமர சாலை வழியாக அண்ணா சாலை செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன் சாலை, லாயிட்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் இரவு 8 மணிக்கு மேல் காமராஜர் சாலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பெசன்ட் நகர் கடற்கரை 6ஆவது அவின்யுவில் இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணி மேரி கல்லூரி வளாகம், சேப்பாக்கம் ரயில்வே நிலையம் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.