வடகிழக்கு பருவமழை PT
தமிழ்நாடு

”அக்.17 ஆம் தேதி கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்” - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17 ஆம் தேதி கரையை நெருங்குகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அக். 17 ஆம் தேதி கரையை நெருங்குகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். 17 ஆம் தேதி அதிகாலை வட தமிழக கரையை தாழ்வு மண்டலம் நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கனமழை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

அதே சமயத்தில் இந்த நான்கு மாவட்டங்களிலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.