தமிழ்நாடு

அதிமுக சார்பில் ஜனநாயக கடமையாற்றவே பேரவைக்கு வந்துள்ளோம் - ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக சார்பில் ஜனநாயக கடமையாற்றவே பேரவைக்கு வந்துள்ளோம் - ஓ.பன்னீர்செல்வம்

webteam


அதிமுக சார்பில் ஜனநாயக கடமையாற்றவே பேரவைக்கு வந்துள்ளதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதிமுகவினரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டப் பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது. அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் யார் என்ற வினாவிற்கு விடை தெரியும் நாளென்பதால் இந்த கூட்டத் தொடர் அதிமுகவினரால் பெரிதும் எதிர்ப்பார்போடு தொடங்கியது.

இந்த நிலையில் சரியாக காலை 9.50 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்திற்குள் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி ஐயப்பன் ஆகியோர் கூட்டாக பேரவைக்குள் வந்தனர். இதையடுத்து கையெழுத்திட்ட பின்னர், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்தார்.

இதையடுத்து இரங்கல் தீர்மானத்தில் கலந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசிய போது... 'அதிமுக சார்பில் ஜனநாயக கடமையாற்றவே பேரவைக்கு வந்துள்ளோம் என்றவரிடம் இபிஎஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.