தமிழ்நாடு

"ஊரடங்கில் போக்குவரத்து நெரிசல்"- சென்னையில் அவலம் !

jagadeesh

ஊரடங்கு உத்தரவையும் மீறி சென்னை பாடி மேம்பாலத்தில் வாகனங்கள் இயக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை முழுவதும் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவை மீறி பயணம் மேற்கொள்பவர்களை  காவல் துறையினர் எச்சரித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பாடி அருகே காவல் துறையினர் சோதனை  நடத்தியதால், ஏராளமான‌ வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால், சமூக விலகல் என்பது கேள்விக்குறியானது. இந்நிலையில், தேவையற்ற பயணங்களை மேற்கொண்ட வாகன ஓட்டிகள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவால் சுமார் ஆயிரத்து 400 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் வேகமாக பரவக்கூடிய 10 இடங்களை மத்திய அரசு
அடையாளம் கண்டுள்ளது. டெல்லியில் தில்ஷத் தோட்டம், நிஜாமுதீன் ஆகிய இடங்களும் மற்றும் நொய்டா, மீரட், பில்வாரா, அகமதாபாத், காசர்கோடு,
பத்தனம்திட்டா, மும்பை, புனே ஆகிய இடங்களிலும் நோய் வேகமாக பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.