தமிழ்நாடு

ஒமைக்ரான் பரவல் தடுப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

ஒமைக்ரான் பரவல் தடுப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

Veeramani

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பு தொடர்பாக மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். 

தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த சூழலில் மாநில அரசுகள் தேவைப்பட்டால் இரவு நேர பொதுமுடக்கம் விதிக்க மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. தொற்று பரவ அதிகமாக வாய்ப்பு உள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் S வகை மரபணு சோதனைக்காக 57 பேரின் மாதிரிகள் அனுப்பப்பட்டன. அதில் ஒருவருக்கு ஏற்கனவே ஓமைக்ரான் உறுதியான நிலையில், நேற்று மேலும் 33 பேருக்கு நேற்று தொற்று உறுதியாகி உள்ளது. இன்னும் 23 பேருக்கு ஜீன் முடிவுகள் வர வேண்டும் என்றும், இவர்கள் அனைவரும் 4 அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.