தமிழ்நாடு

கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில் செயல்படும் முதியோர் இல்லங்கள்: சவால்களும், சேவைகளும்!

கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில் செயல்படும் முதியோர் இல்லங்கள்: சவால்களும், சேவைகளும்!

JustinDurai

கொரோனா முதல், 2-ஆம் அலைகளில் அதிகம் பாதிக்கப்படுவது முதியோர்களாக இருக்கிறார்கள். ஒரு வீட்டில் உள்ள முதியோரை பராமரிப்பதே சவாலாக இருக்கும் நிலையில், முதியோர் இல்லங்கள் பல சவால்களுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் 300-க்கும் அதிகமான முதியோர் இல்லங்கள் உள்ளன. சென்னையில் மட்டுமே 180 முதியோர் இல்லங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். முதியோரை பராமரிக்கும் பணியில் பல தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. முந்தைய காலகட்டங்களைவிட இந்த பெருந்தொற்று காலத்தில் முதியோரை பாதுகாப்பது மிகவும் சவாலாக இருப்பதாக கூறுகிறார்கள் தொண்டு நிறுவனத்தினர். கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் மட்டும் கடந்த 7 ஆண்டுகளாக 25 முதியோர் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

முதியோருக்கு தினசரி மூன்று வேளை உணவு என்பதோடு, மருத்துவத் தேவைகளையும் சில தன்னார்வலர்கள் பூர்த்தி செய்கிறார்கள். சத்தான உணவு வழங்குவதையும் உறுதிபடுத்துவதாக கூறுகிறார்கள்.

கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் உறவினர்களும், தன்னார்வலர்களும் கடந்த காலங்களைப்போல பெரிய அளவில் உதவி செய்ய முடியாதநிலையில், பொருளாதார, தினசரி தேவைகளை நிறைவேற்றும் சவாலுடன் பல முதியோர் இல்லங்கள் இயங்கிவருகின்றன.