சோதனை நடத்தப்பட்ட நிறுவனம், திருப்பதி லட்டு தயாரிப்பு pt web
தமிழ்நாடு

திருப்பதி லட்டு விவகாரம் | திண்டுக்கல் நெய் நிறுவனத்தில் 13 மணி நேரம் சோதனை!

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில், மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நடத்திய சோதனை 13 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

PT WEB

திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார் நத்தம் பிரிவில் உள்ள ஏ.ஆர். டெய்ரி புட் நிறுவனத்திற்கு வந்த மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, நிறுவனத்தின் தயாரிப்புகளான பால், நெய், பன்னீர், வெண்ணெய், தயிர், மோர், இனிப்பு போன்ற பொருள்களை ஆய்விற்காக எடுத்தார். 13 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மாதிரிகள் சேகரிப்பு நடைபெற்றது.

மேலும், இதுகுறித்து மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரவின் முருகேசன் கூறும்போது, பொருட்களின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும், அதில், குறைகள் இருந்தால் அடுத்தக்கட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆய்வுகள் முடிவடைந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

திருப்பதி லட்டு பிரசாத தயாரிப்பிற்காக கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் இருந்து நெய் அனுப்பப்பட்ட நிலையில், அதில் 20 விழுக்காடு மட்டுமே தரம் இருக்கிறது என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த நெய்யில், சோயா பீன்சில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு அறிக்கை ஜூலை 16-ந் தேதி வெளியானது. இதையடுத்து அந்த நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்த்துவிட்டு, வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து நெய் கொள்முதல் செய்யப்படுகிறது.