தமிழ்நாடு

புதிய தலைமுறை செய்தி எதிரொலி.. லீவு விடப்பட்ட பள்ளிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை..!

புதிய தலைமுறை செய்தி எதிரொலி.. லீவு விடப்பட்ட பள்ளிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை..!

Rasus

புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மேன்சன்கள், ஹோட்டல்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தண்ணீர் பற்றாக்குறையால் குரோம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, வரும் 24-ஆம் தேதி முதல் அரை நாள்தான் இயங்கும் என அறிவித்துள்ளது.

இதனிடையே தண்ணீர் பஞ்சம் காஞ்சிபுரத்தையும் விட்டுவைக்கவில்லை. கடும் தண்ணீர் தட்டுபாடு காரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவித்தது. Pre kg வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டுமே இந்த விடுமுறை பொருந்தும் என்றும் கூறியிருந்தது. இதுதொடர்பான செய்தி புதிய தலைமுறையிலும் வெளியானது. இதனையடுத்து பள்ளிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக  மாவட்ட கல்வி அதிகாரி மகேஸ்வரி அந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் 6000 லிட்டர் குடிநீர் கேன் வரவழைக்கப்பட்டு, நகராட்சி மூலம் நீர் நிரப்பப்பட்டது. இதனையடுத்து வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.