தமிழ்நாடு

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் திடீர் ஆய்வு

Rasus

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

ரங்கராஜ நரசிம்மன் என்பவர், ஸ்ரீரங்கம் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாகவும், மூலவர் சிலையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில் ஆய்வு செய்து 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதனையடுத்து, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையிலான குழுவினர் ஸ்ரீரங்கம் கோயிலில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சக்கரத்தாழ்வார் சன்னதி, கருவறை உள்ளிட்ட இடங்களில் அவர்கள் ஆய்வு நடத்தினர். கோயிலில் இருந்த புருஷோத்தம பெருமாள் சிலை காணவில்லை என்று கூறப்பட்ட நிலையில், கோயிலின் ஆயிரம் கால் மண்டபத்தில் அந்தச் சிலை உள்ளது. இதுபோல் சிதிலமடைந்த 80 சிலைகளை ஆயிரம் கால் மண்டபத்தில் கோயில் நிர்வாகத்தினர் காட்சிப்படுத்தியுள்ளனர்.