தமிழ்நாடு

‘தங்கம் ஆன தக்காளி’: கடும் விலை உயர்வு

‘தங்கம் ஆன தக்காளி’: கடும் விலை உயர்வு

webteam

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதியில் போதிய மழை இல்லாததால் தக்காளி விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய் வரை உயர்ந்து காணப்‌படுகிறது. சென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை ஆசியாவிலே மிகப்பெரிய சந்தையாகும் இந்த சந்தைக்கு சுற்றுவட்டார பகுயில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் இந்த சந்தைக்கு அனைத்து வகையான காய்கறி கலை கொண்டு வரப்பட்டு தறம் பிரிக்கபட்டு பின்பு பல மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. குறிப்பாக கேரளா, ஆந்திரா, மும்பை மற்றும் பல்வேறு மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். தற்போது, தமிழகத்தில் மழை பொய்த்து போனதால் இங்கு குறிப்பாக அனைத்து விவசாயமும் பாதிக்கப்பட்டு உள்ளது. இப்போது தக்காளி சீசன் என்பதால் சுற்றுவட்டார பகுதியில் போதிய நீரின்றி தக்காளி விவசாயம் பாதிக்கபட்டு ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஐந்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் சுமார் ஐநூறு பெட்டிகளுக்கு மேல் இங்கு இறக்குமதி செய்யப்பட்டு கிலோ 1-க்கு ரூ.70 முதல் ரூ.85 வரை சில்லரை வியாபாரிக்கு விற்பனை செய்யப்பட்டு வருவாதால் பொதுமக்கள் வியாபாரிகள் தக்காளி வாங்க மறுத்து வருகின்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து பல்வேறு பகுதிக்கு காய்கறி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலைமாறி தற்போது வெளிமாநிலங்களில் இருந்து காய்கறி இறக்குமதி செய்யப்பட்டு அனுப்பும் நிலை உருவாகி உள்ளது. எனவே மீண்டும் மழை பொழிந்தால் மட்டுமே இங்கு விவசாயம் செய்யப்பட்டு சந்தைக்கு காய்கறிகள் கொண்டுவரப்படுமானால் மட்டுமே இந்த விலை குறையை வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர்.