விஜய் - சீமான் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“நான் கதை சொல்பவன் இல்ல தம்பி.. அது கொள்கை அல்ல கூமுட்டை..” தவெக கொள்கைகளுக்கு சீமான் விமர்சனம்

"தம்பி நான் குட்டி கதை சொல்பவன் அல்ல. வரலாற்றை கற்பிக்க வந்தவன்" என தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்கும் வகையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் பேசியுள்ளார்.

Angeshwar G

செய்தியாளர் பால வெற்றிவேல்

விஜய் சொன்னது என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு கடந்த 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடந்தது. மாநாட்டில் பேசிய விஜய் திராவிடத்தையும் தமிழ்தேசியத்தையும் பிரித்துப் பார்க்கப்போவதில்லை என தெரிவித்திருந்தார். அதாவது, “திராவிடமும், தமிழ்தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள் என்பதுதான் தவெகவின் கருத்து. அதனால் எந்த ஒரு குறிப்பிட்ட அடையாளத்திற்குள்ளும் நம்மைச் சுருக்கிக்காமல் தமிழ்நாட்டு உரிமைகளைச் சார்ந்த இந்த மண்ணுக்கான மதச்சார்பற்ற சமூகநீதிக்கொள்கைகளை நமது கொள்கை அடையாளமாக முன்னிறுத்தி செயல்படப்போறோம்” என தெரிவித்திருந்தார்.

தவெக மாநாட்டில் விஜய்

இந்த கருத்துக்கு அப்போதே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்வினை ஆற்றியிருந்தார். “திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றல்ல. அது எங்கள் கொள்கைக்கு நேரெதிரானது. அதுவேறு இதுவேறு” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விஜய்யின் கொள்கைகளை நேற்று மேடையொன்றில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் சீமான். அவர் கூறுகையில், “தம்பி இது பண்பாட்டு புரட்சி தம்பி. என் மூதாதையர் முப்பாட்டனின் தோளில் இருந்த பணப்பையை அறுத்து கொண்டு ஓடி விட்டாய். இந்த தலைமுறை பேரனும், பேத்தியும் விரட்டி அடித்து பறிக்கிறோம்.

“It's very wrong bro”

நான் குட்டிக் கதை சொல்பவன் இல்லை தம்பி. வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல்தான் பெரியார் அம்பேத்கர் எல்லோரையும் படிக்க வேண்டும். நாங்கள் அதைப் படித்து பி.எச்.டி வாங்கி விட்டோம்.

நீங்கள் இனிமேல்தான் சங்க இலக்கியத்தில் எங்கு இலக்கியம் உள்ளது என்று தேட வேண்டும். சங்க இலக்கியத்தில் வருகிற தலையங்கானத்து பாண்டிய நெடுஞ்செழிய மன்னனின் பேரனும் பேத்தியும் நாங்கள். அது கதையல்ல, எங்கள் இனத்தின் வரலாறு.

சீமான்

எதிர்ப் புரட்சி முட்டுக்கு முட்டு, வெட்டுக்கு வெட்டு. அன்பு என்றால் அன்பு, பேரன்பு. வம்பு என்றால் வம்பு. நீங்கள் வெட்ட அரிவாளை ஓங்கினால் விழுந்து கும்பிட மாட்டோம். வெட்ட நினைக்கும் போதே வெட்டிவிடுவோம்.

தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றா? அடிப்படையே தவறு. இது கொள்கையல்ல, கூமுட்டை. சாலையின் அந்த ஓரத்தில் நில் அல்லது இந்தப் ஓரத்தில் நில். நடு ரோட்டில் நின்றால் லாரியில் அடிபட்டு இறந்துவிடுவாய். இது நடுநிலை இல்லை. மிகக் கொடுநிலை. what bro.. It's very wrong bro...

இது பஞ்ச் டயலாக் இல்ல, நெஞ்சு டயலாக்

நான் கருவிலேயே என் எதிரி யார் என்று தீர்மானித்துவிட்டேன். நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து சிந்தித்து வந்தவன் அல்ல. கொடும் சிறையில் இருந்து சிந்தித்து வந்தவன்.

இது சினிமா பஞ்ச் டயலாக் இல்ல தம்பி, நெஞ்சு டயலாக் இது. எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரிதான். அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. வேலு நாச்சியார் படத்தை வைத்துவிட்டால் போதுமா? வேலு நாச்சியார் யார் என்று சொல்லு தம்பி.

சீமான், விஜய்

சத்தமாகப் பேச நான் வரவில்லை என்றால் வேலு நாச்சியார், அழகு முத்துக்கோன், அஞ்சலை, சேர சோழ பாண்டியர் யார் என்று தெரியாது. நீங்க வைத்துள்ள கட்டவுட்டுகள் எல்லாம் நான் வரையவைத்த படங்கள். தீரன் சின்னமலையை சங்க இலக்கியத்தில் படிக்கக் கூடாது தம்பி. இப்போதுள்ள வரலாற்றில் படிக்க வேண்டும். அவன் மன்னன் இல்லை. விவசாயக் குடும்பத்தில் பிறந்த எளிய மகன். திப்பு சுல்தானின் படையை விரட்டி அடித்தவன்” என தெரிவித்தார்.