சீமா, ஆம்ஸ்ட்ராங் pt web
தமிழ்நாடு

“மண்ணின் மகனின் கொலை.. நாங்கள் கண்டுபிடிப்பதுதான் சரியாக இருக்கும்.. சிபிஐ தேவையில்லை” - சீமான்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல எனவும், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

PT WEB

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரது உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திய பின் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில் கூறுகையில், “கொலை செய்தவர்கள் வேறு சரணடைந்தவர்கள் வேறு என்பது சாதாரண பாமரனுக்கே தெரிகிறது. குற்றச்செயல் மறைக்கப்படுகிறது. அதனால் நியாயமான விசாரணை வேண்டும் என கேட்கிறோம். மாயாவதி நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தி சிபிஐ விசாரணை வேண்டும் என்கிறார். அது தேவையில்லை. எங்கள் மாநிலத்திலேயே ஆகச்சிறந்த காவல்துறை, உளவுத்துறை, சிபிசிஐடி என இருக்கும்போது ஏன் சிபிஐ? மாநில உரிமை இது,. என் மண்ணின் மகனின் கொலை. அதை நாங்கள் கண்டுபிடிப்பதுதான் சிறப்பு. சிபிஐ இதுவரை என்ன சிறப்பாக கண்டுபிடித்து சொல்லி இருக்கிறது என நினைக்கிறீர்கள்” என தெரிவித்துள்ளார்.