கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் தலைமையில் அறிவித்தனர். கட்சியிலிருந்து விலகுவதற்கான காரணத்தையும் கரு.பிரபாகரன் தெரிவித்திருந்தார்.
அதில், நாம் தமிழர் கட்சியில் யாரும் வளர கூடாது என சீமான் நினைக்கிறார் என்றும், சீமான் பணத்துக்கு விலை போய்விட்டார் என கருதுகிறோம் எனவும், நாங்கள் கஷ்டப்படுகிறோம், சீமான் சொகுசாக வாழ்கிறார் என பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வைத்திருந்தார்..
இந்தவகையில், கரு.பிராகரன் பேசியதற்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கமளித்துள்ளார். அதில், ”அது கட்சிக்குள் இருக்கின்ற விஷயம்தான். திருப்தி இருக்கிற இடத்தில் போய் சேர்ந்துக்கொள்ள வேண்டியதுதான்.. இது ஒரு பெரிய சிக்கல் கிடையாது. இதனால், நாட்டிற்கும் மக்களுக்கும் ஒன்றும் பிரச்னை இல்லையே. அதுமாதிரியான பிரச்னைகளாக இருந்தால் பேசுங்கள். கட்சியை நான்தான் வழிநடத்தி செல்கிறேன்..அப்போது என்மீதுதான் குற்றச்சாட்டை வைக்க முடியும்.
அவர் 5 கோடியை கட்சியின் பெயரை சொல்லி, காசை வசூல் செய்திருக்கிறார்..அதை நான் சொல்ல வேண்டுமா?. என் முகத்திற்காக எல்லோரும் வழக்கு எதுவும் கொடுக்காமல் இருந்தார்கள். இதை போய் பேசின்னால்.. எனக்கு தகுதியாக இருக்குமா? தரமானதாக இருக்குமா?. இது அனைத்தும் வளர்கின்ற கட்சிக்குள் இருக்கிற விஷயங்கள்தான். இதையெல்லாம் ஒரு பிரச்னையாக பேசாதீர்கள். அது என் கட்சி பிரச்னை.. என் பிரச்னை.. அதை நான் எதிர்க்கொண்டுவிடுவேன். இதுநாட்டிற்கும் மக்களுக்கும் பிரச்னை இல்லை. “ என்று தெரிவித்துள்ளார்.
இவர்களை தொடர்ந்து, நாதக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.. இப்படி, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்த நாம் தமிழர் கட்சி்யிலிருந்து விலகிவருவதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.