அமீர் சீமான் PT
தமிழ்நாடு

”நீட் தேர்வு போலி மருத்துவர்களை தான் உருவாக்குகிறது” - மாறி மாறி ஆவேசமாக விமர்சித்த சீமான், அமீர்!

மருத்துவ கல்வியில் அமெரிக்க ஏன் நிறுவனத்தின் தலையீடு - சீமான் கேள்வி

PT WEB

நேற்று நீட் தேர்வு முடிந்த நிலையில், இந்த தேர்வு குறித்து சீமான் கூறிய கருத்துக்களை இங்கே பார்க்கலாம்.

சீமான் பேசிய பொழுது, ”இதனால்தான் நாங்கள் நீட் வேண்டாம் என்கிறோம். நீட் போலி மருத்துவரைதான் உருவாக்குகிறது. நீட் தேர்வில் முறைகேடு செய்ததற்காக வட இந்தியாவில் 50 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் மருத்துவ மாணவர்களை உருவாக்குவதற்கு அமெரிக்க நிறுவனத்திற்கு என்ன தேவை?” என்று கேள்வி கேட்டுள்ளார்.

அமீர் பேசும்பொழுது, ”என் பெண் நீட் எழுத போகும்பொழுது அவள் அணிந்திருந்த புர்காவையும், கழட்டிவிட்டு தேர்வு எழுத சொன்னார்கள். என் மகள் மறுத்துவிட்டு நீட் தேர்வு எழுதாமல் வீட்டிற்கு வந்துவிட்டாள் . ஆனால் நான் இச்செய்தியை எந்த ஊடகத்திற்கும் தெரிவிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து இவர்கள் கூறியுள்ள தகவல்களை தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்