Seeman pt desk
தமிழ்நாடு

“எங்கள் வரிப்பணத்தில் கொடுக்கும் மகளிர் உதவித் தொகையை பெற எதற்கு தகுதி?” - சீமான் கேள்வி

“மகளிருக்கு வழங்கப்படும் உதவி தொகையை தகுதி பார்த்து கொடுப்பதற்கு நீ யார்? எங்கள் வரிப் பணத்தில் கொடுப்பதற்கு எதற்கு தகுதி?” என தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேச கேள்வி.

webteam

செய்தியாளர்: பாலாஜி

கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீச பாண்டியன் மற்றும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கனிமொழி ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய போது, “50 ஆண்டுகாலம் ஒரே சின்னத்திற்கு வாக்களித்து விட்டீர்கள். அவர்களால் உங்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை.

சமூக நீதி என பேசி வரும் திமுக-வினருககு கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஓட்டு மட்டும் தேவை. ஆனால், அவர்கள் தேர்தலில் போட்டியிட ஒரு பொதுத் தொகுதியையும் ஒதுக்கவில்லை. தம்பி உதயநிதி ஒரே ஒரு செங்கலை எடுத்துக் கொண்டு வலம் வருகிறார்.

மகளிர் உரிமை தொகை வழங்க தகுதி பார்ப்பதற்கு நீ யார்? அதென்ன உங்கள் அப்பன் வீட்டு காசா, இல்லை உங்கள் தாத்தா வீட்டு காசா? எங்கள் வரிப் பணத்தில் உதவித்தொகை வழங்குவதற்கு எங்களிடமே எதற்கு தகுதி பார்க்க வேண்டும்?

அரசு பேருந்தில் இலவசம், யார் வழங்கச் சொன்னது? பின் வந்து ஓசி என பேசுவது.... தமிழனே ஓசியென கூறுபவர்களை பற்றி கொஞ்சம் யோசி! நாம் தமிழர் தம்பிகளை கொஞ்சம் நேசி.

தேர்தல் பரப்புரையில் சீமான்

நாட்டின் முதல் குடிமகனான திரௌபதி முர்மு, கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. புதிய மாற்றத்திற்காக மைக் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என்று பேசினார். தொடர்ந்து, “ஓட்டு போட போற பொண்ணு ஒதுங்கி நிக்காத, கண்ட கண்ட சின்னம் கண்டு கலங்கி நிக்காத: உழைக்கும் மக்கள் சின்னம் இந்த ஒலிவாங்கி சின்னம்” என பாட்டுப்பாடி வாக்கு சேகரித்தார்.