நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜர் pt desk
தமிழ்நாடு

விழுப்புரம்: ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சர்ச்சை பேச்சு – நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜர்

ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார். இதைதொடர்ந்து வழக்கு விசாரனையை 4 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்

PT WEB

செய்தியாளர்: காமராஜ்

கடந்த 2019-ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது கஞ்சனூர் அருகேயுள்ள நேமூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் பேசியபோது, “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை விடுதலைபுலிகள்தான் படுகொலை செய்தார்கள்; அதே போன்று சம்பவம் செய்வோம்” என பேசியிருந்தார்.

நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜர்

இதையடுத்து ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ரமேஷ் கஞ்சனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் இவ்வழக்கு விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். இதைத் தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சத்யநாராயணன், வழக்கு விசாரனையை 4.11.2024 தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் சீமான் ஆஜராக உத்தரவிட்டார்.