தமிழ்நாடு

நொய்யல் ஆற்றில் மீண்டும் நுரை

நொய்யல் ஆற்றில் மீண்டும் நுரை

webteam

திருப்பூர் நொய்யல் ஆற்றில் மீண்டும் நுரை பொங்கி வருவதால் சாய ஆலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் காசிப்பாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றில் நுரை  பொங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். நொய்யல் ஆற்றில் தண்ணிர் வரும் சமயங்களில் சாய ஆலைகள் ரசாயன கழிவுகளை ஆற்றில் வெளியேற்றிய வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக கடந்த ஆண்டு நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்த போது ரசாயனக் கழிவுகள் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக நொய்யலில் நுரை பொங்கி பறந்தது. இதனையடுத்து சாய ஆலைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்து.

இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் கோவை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக நொய்யலில் தண்ணிர் வரத்து சீராக இருந்து வருகிறது. சாயக் கழிவுகள் கலக்காமல் தெளிவாக சென்று வந்த நொய்யலில் இன்று காசிப்பாளையம் பகுதியில் நுரை பொங்கி பறந்தது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மங்கலம், ஆண்டிப்பாளையம், பாரப்பாளையம் என பல பகுதிகளை கடந்து வரும் நொய்யல் காசிப்பாளையம் பகுதியில் வந்த பின்தான் நுரை ஏற்படுவதாகவும், காசிப்பாளையம் பகுதியில் தான் பெரும்பாலான சாய ஆலைகளும் சாயக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களும் உள்ளதாக இந்தப் பகுதியில் முறைகேடாக சாயக் கழிவுகளை வெளியேற்றும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.