தமிழ்நாடு

முரசொலி நிலம் பஞ்சமி நிலமா? : திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

முரசொலி நிலம் பஞ்சமி நிலமா? : திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

webteam

முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலத்தைச் சேர்ந்தது என சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக தரப்பிலும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். திமுக தலைவர் ஸ்டாலினும் பஞ்சமி நிலத்தில்தான் முரசொலி அலுவலம் இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதைத்தொடந்து இந்த புகார் தொடர்பாக முரசொலி பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய பட்டியலின ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. அதில், நேரில் விளக்கம் அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் வரும் 19 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்தவுள்ளார்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஜனவரி 7 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.