சென்னையில் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் 227 விடுதிகள் மீது மாவட்ட ஆட்சியர் கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், குழந்தைகள் மற்றும் பெண்கள் விடுதிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி சென்னை மாவட்ட ஆட்சியர் விடுதிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக சிறப்பு தணிக்கையில் ஈடுப்பட்டார். அப்போது 227 விடுதிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து 227 விடுதிகளுக்கும் விளக்கம் கேட்டு ஆட்சியர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அங்கீகாரமற்ற விடுதிகளின் குடிநீர் மற்றும் மின் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க சென்னை ஆட்சியர் வலியுறித்தியுள்ளார். விடுதிகள் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க சென்னை மாவட்ட துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ள 1050 விடுதிகளின் விவரங்கள் சென்னை மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.