தமிழ்நாடு

“நீ எந்த ஏரியா” : நொளம்பூர் எஸ்.ஐ-யிடம் மிரட்டல் பேச்சு; வைரலான வீடியோவால் இளைஞர் கைது

நிவேதா ஜெகராஜா

நொளம்பூரில் காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்டு, அவர்களை மிரட்டும் வகையில் பேசிய நபரின் வீடியோ சமூக வளைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நொளம்பூர் அடுத்த ரெட்டிப்பாளையம்  பகுதியில் அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்டி வருகிறார். அந்த சாலையில் அவர் ஜல்லி, மணல் கொட்டி வைத்திருப்பதாக கூறி அங்கு வந்த ஒரு நபர் வீடு கட்டும் உரிமையாளரிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்து நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்துள்ளார்.

அவர் வந்து கேட்டபோது, அங்கிருந்த இளைஞர் மதுப்போதையில் இருந்தாக கூறப்படுகிறது. எனவே அந்த இளைஞர்  போலிசாரிடம் தகாறில்  ஈடுபட்டார். உதவி ஆய்வாளர் கோவிந்தராஜிடம், “என் ஊரில் வந்து என்னை கேட்க நீ யார்” எனவும், “நீ எந்த ஏரியா” என்றும் கேட்டு மிரட்டியுள்ளார். பின்னர் போலிசார் அந்நபரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு அவர் தனது ஊர் நொளம்பூர் தான் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவுசெய்திருக்கிறார். இந்த காட்சிதான் சமூகவலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது. அந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து, காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட  சென்னீஸ் (எ) சென்னீஸ்குமார் (வயது 26) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.