தமிழ்நாடு

காற்றை வைத்து குடிநீர் தயாரிக்கும் பொறியாளர் - சென்னையில் ஒரு புரட்சிகர வீடு

காற்றை வைத்து குடிநீர் தயாரிக்கும் பொறியாளர் - சென்னையில் ஒரு புரட்சிகர வீடு

webteam

சென்னையில் தண்ணீர், மின்சாரத் தட்டுப்பாடு இல்லாமல் ஒரு வீடு இருந்து வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

சென்னை கீழ்பாக்கத்தில் வசிப்பவர் ஓய்வு பெற்ற பொறியாளர் சுரேஷ். இவரை அனைவரும் சோலார் சுரேஷ் என்றுதான் அழைக்கின்றனர். ஏனென்றால் தனது வீடு முழுக்க சோலார் சிஸ்டத்தை பயன்படுத்தி மின்சாரத்தை பெற்று வருகிறார். அவர் கூறும் போதும், ‘25 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தினேன். அப்போது யாருக்கும் அதுதொடர்பாக பெரிய விழிப்புணர்வு இல்லை. 

பள்ளிப் புத்தகத்தில் படித்தது போல, கூழாங்கல், நிலக்கரி, மணல் கொண்டு தண்ணீரைச் சுத்திகரித்து பயன்படுத்துகிறேன். மேலும், மழைநீரை கிணற்றில் சேகரிக்கிறேன். இதனால் இன்று வரையிலும் எனது வீட்டில் தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை. இதை சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஆச்சர்யப்படுவார்கள். என்னிடம் போர்வெல், கிணற்றில் தண்ணீர் உள்ளது. அத்துடன் காற்றிலிருந்து நீரை பிரித்தெடுக்கும் கருவியை செய்துள்ளேன். அதிலும் தண்ணீர் இருக்கிறது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் எனது வீட்டில் மாடியில் சோலார்களை பொறுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கிறேன். அதன்மூலம் தற்போது 3 கிலோ வாட் மின்சாரம் தயாரித்து வைத்துள்ளேன். அதில் இரண்டு ஏசிகள், வாஷிங் மிஷன், மிக்ஸி, மோட்டார் பம்ப், மின் விசிறி, டிவி, மின் விளக்குகள், கம்ப்யூட்டர் என வீட்டில் உள்ள அனைத்து பொருட்களை பயன்படுத்துகிறேன். நான் சோலார் உபயோகிப்பதால் 8 வருடங்களாக எங்கள் வீட்டில் இல்லை. இதற்கு 2 மாதத்திற்கு ரூ.500 தான் செலவாகிறது.” என்று கூறினார்.