தமிழ்நாடு

5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி, சிலிண்டர் மானியம் எங்கே? ஆளுநர் உரை அதிருப்தி: விஜயகாந்த்

sharpana

”ஆளுநர் உரையில், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 ரூபாய் நிதியுதவி உள்ளிட்ட திமுக தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது” என்று தேமுக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகத்தின் 16-வது கூட்டத்தொடரை தொடக்கிவைத்து பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் மத்திய அரசிடம் வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து பேசினார். அவர் பேசிய பின்பு ஆளுநர் உரை குறித்து பல கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “பெட்ரோல் ₹5 & டீசல் ₹4 குறைப்பு, மதுவிலக்கு, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ₹1000 நிதியுதவி, வங்கிகளில் 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி, கேஸ் சிலிண்டருக்கு ₹100 மானியம் உள்ளிட்ட, திமுக தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்பு, ஆளுநர் உரையில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.