இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் வெங்குளம், கொடிக்குளம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் போதிய பேருந்து வசதி இல்லாததால், சுமார் 5 கிலோ மீட்டர் நடந்தே பள்ளி செல்லும் நிலை உள்ளது. இதனால் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும், உரிய நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலை உள்ளதாகவும் கூறும் மாணவர்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்த முழுச் செய்தியையும் கேட்க இந்த வீடியோவைப் பார்க்கவும்.