தமிழ்நாடு

மாவட்ட நீதிபதிகள் முதல்நிலை தேர்வு : ஒருவர் கூட தேர்ச்சி இல்லை

webteam

தமிழகம் முழுவதும் 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு நடைபெற்ற முதல் நிலைத் தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள‌ 31மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்று கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பாணை வெளியானது. இந்த பணிக்கான முதல் நிலைத் தேர்வு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்றமும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும் இணைந்து நடத்திய தேர்வில், சிவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என மொத்தம் மூவாயிரத்து 562 பேர் பங்கேற்றனர். 

பிரதான தேர்வு மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடக்க உள்ள நிலையில், முதல் நிலைத் தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவில் கேள்விகள் மிகக் கடுமையாக இருந்ததாகவும், தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கப்பட்டதாலும் ஒருவர் கூடத் தேர்ச்சி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.