தமிழ்நாடு

'மாவட்டங்களுக்கு இடையே பயணித்தால் தனிமைப்படுத்துதல் இல்லை' சுகாதாரத்துறை அறிவிப்பு !

'மாவட்டங்களுக்கு இடையே பயணித்தால் தனிமைப்படுத்துதல் இல்லை' சுகாதாரத்துறை அறிவிப்பு !

jagadeesh

மாவட்டங்களைத் தாண்டி பயணிப்பவர்களுக்கு இனி கட்டாய மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்துதல் கிடையாது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பவர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை தேவையில்லை என்றும் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர், 96 மணி நேரத்திற்குள் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் நோய்த்தொற்று இல்லை என்பதற்கான சான்றை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சான்றுகள் இல்லாத பயணிகள் அனைவருக்கும் கொ‌ரோனா பரிசோத‌னை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சான்று உள்ளவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவர் என்றும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியாக தமிழகம் வந்து 72 மணி நேரத்திற்குள் சொந்த ஊர் திரும்புவர்களுக்கு பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.