தமிழ்நாடு

“17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டார்கள்”- மோகன கிருஷ்ணன் தகவல்

“17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டார்கள்”- மோகன கிருஷ்ணன் தகவல்

Rasus

சென்னையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுமியை அங்குள்ள ஊழியர்களே கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட 17 பேரையும் ஜூலை 31-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே நீதிமன்ற வளாகத்தில் இருந்து 17 பேரையும் சிறைக்கு அழைத்துச் சென்ற நேரத்தில் அவர்கள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தினர். நீதிமன்ற வளாகத்திலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  17 பேருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாராவது ஆஜரானால் அவர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் மோகன கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.