தமிழ்நாடு

பீனிக்ஸ் மால் சென்ற 3,300 பேருக்கு கொரோனா பரிசோதனை

பீனிக்ஸ் மால் சென்ற 3,300 பேருக்கு கொரோனா பரிசோதனை

jagadeesh

சென்னை பீனிக்ஸ் வணிக வளாகத்திற்குச் சென்ற 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா அறிகுறி இல்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

 பீனிக்ஸ் வணிக வளாகத்தில் பணிபுரிந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 10 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அங்குச் சென்றவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, 3 ஆயிரத்து 300 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லையெனவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் புதிய தலைமுறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட, பீனிக்ஸ் வணிக வளாகத்தின் பணியாளர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.