மாதவரம் ரசாயான ஆலை தீவிபத்தின் காரணமாக காற்றில் அபாயகரமான அளவுக்கு காற்று மாசு ஏற்படவில்லை என்று மாசுக்கட்டுபாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாதவரம் ரவுண்டானா பகுதியில் உள்ள ரசாயனக் கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்துள்ள 50க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இப்போது ஸ்கைலிப்ட் இயந்திரத்தைக் கொண்டு தீயை அணைக்கும் பணி தொடங்கியுள்ளது.
தீவிபத்து குறித்து தெரிவித்துள்ள மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் தலைவர் வெங்கடாஜலம் " மக்கள் யாரும் கவலையடைய வேண்டாம்அபாய கரமான அளவிற்கு காற்றில் மாசு ஏற்படவில்லை. இதுவரை மணலியில் உள்ள ஆய்வு மையம் தொடர்ந்து தரம் குறித்து ஆய்வு செய்து வருகிறது. மேலும் 5 க்கும் மேற்பட்ட வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்" என தெரிவித்துள்ளார்.