மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே பாரம்பரியமான நீலகிரி மலை ரயில் நூற்றாண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது.
நீராவி இஞ்ஜின் மூலம் இயக்கப்படும் இந்த ரயில் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீலகிரி மலை ரயில் தினசரி மேட்டுப்பாளையம் - குன்னூர் - ஊட்டி இடையே இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு நீராவி இஞ்ஜின் மூலமாகவும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு டீசல் இஞ்ஜின் இணைக்கப்பட்டு இயக்கப்படும்.
கோடை விடுமுறைக்கு நீலகிரி மலை ரயிலில் செல்வதற்கு டிக்கெட் கிடைப்பதே சிரமம். ஆனால், பல நேரங்களில் இந்த மலை ரயிலில் கோளாறு ஏற்பட்டு பாதி வழியில் நின்றுவிடும். அதுபோலவே, இன்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை புறப்பட்ட மலை ரயில் உந்து சக்தி குறைவால்,
ஹில்குரோவ் - கல்லார் ரயில் நிலையங்கள் இடையே நின்றுவிட்டது. இதனையடுத்து ரயில்வே ஊழியர்கள் மலை ரயிலை சரி செய்ய விரைந்துள்ளனர். நீலகிரி மலை ரயில் பாதி வழியில் நின்றுவிட்டதால் நூற்றுக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர்.