தமிழ்நாடு

#TopNews நிவர் புயல் நிலவரம் முதல் ஆக்ஸ்ஃபோர்டு கொரோனா தடுப்பூசி வரை...!

#TopNews நிவர் புயல் நிலவரம் முதல் ஆக்ஸ்ஃபோர்டு கொரோனா தடுப்பூசி வரை...!

jagadeesh

நிவர் புயல் தீவிர புயலாக மாறி நாளை பிற்பகல் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவிப்பு. கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ.வேகத்தில் காற்று வீச வாய்ப்பு.

சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் விடியவிடிய கனமழை. தாழ்வான பகுதிகளில் கரை புரண்டோடும் வெள்ளம்.

பாம்பன், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். படகுகளை பத்திரமாக நிறுத்தும் மீனவர்கள்.

புதுக்கோட்டை, நாகை, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்.

நிவர் புயல் உருவாகும் நிலையில் 6 ரயில் சேவைகளை இ்ன்றும் நாளையும் ரத்து செய்தது தெற்கு ரயில்வே. மேலும் 9 ரயில்கள் சில பகுதிகளில் மட்டும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிப்பு.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் தவசி காலமானார். ஓராண்டாக நோயுடன் போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

கொரோனா தடுப்பு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை. கொரோனா வைரஸ் கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிகிறார்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியை 2 முறை செலுத்தினால் 90 சதவிகிதம் வரை பலனளிப்பதாக அறிவிப்பு. குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு தடுப்பு மருந்தை தருவதில் மேலும் ஒரு அடி எடுத்து வைக்கப்பட்டிருப்பதாக பெருமிதம்.