தமிழ்நாடு

தீவிர புயலாக கரையை கடக்கும் 'நிவர்': எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு தெரியுமா?

தீவிர புயலாக கரையை கடக்கும் 'நிவர்': எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு தெரியுமா?

webteam

தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிவர் புயல் சின்னம், தீவிர புயலாக கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், “வங்கக் கடலில் நிவர் தீவர புயலாக கரையை கடக்கும்போது 120 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது. சென்னையில் இருந்து 590 கி.மீ தூரத்திலும் புதுச்சேரியில் இருந்து 550 கி.மீ தூரத்திலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் சென்னை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த புயல் நாளை மறுநாள் கரையை கடக்க உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், காரைக்கால் மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ” எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 25 ஆம் தேதி பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.