தமிழ்நாடு

“என் தமிழை புரிந்து கொள்ளாமல் வழக்குப் போடுகிறார்கள்” - நித்தியானந்தா புதிய வீடியோ 

“என் தமிழை புரிந்து கொள்ளாமல் வழக்குப் போடுகிறார்கள்” - நித்தியானந்தா புதிய வீடியோ 

webteam

சர்ச்சை வளையத்தில் சிக்கியிருக்கும் நித்தியானந்தா, புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு நகைச்சுவையாக விளக்கம் அளித்திருக்கிறார். 

குஜராத்தில் உள்ள நித்தியானந்தா சர்ச்சையில் சிக்கி உள்ளது. காவல்துறையினர் நாடியுள்ளனர். இதன் அடுத்தகட்டமாக ஆசிரமத்துக்கு நிதி திரட்டும் பணிகளில் குழந்தைகளை நித்தியானந்தா ஈடுபடுத்தியது உண்மைதான் என அங்கிருந்து மீட்கப்பட்ட சிறுமி தெரிவித்திருந்தார். ஆனால் பிரச்சனைக்கு மேல் பிரச்னை வந்தாலும், எத்தனை பெரும் சர்ச்சையில் சிக்கினாலும், என்னதான் நடக்கட்டும், நடக்கட்டுமே என ‘கூல்’ஆக சொற்பொழிவாற்றி வருகிறார், நித்தியானந்தா.

பாலியல் வீடியோ தொடங்கி, சமீபத்திய குழந்தை கடத்தல் புகார் வரை, சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் அவரது வாழ்க்கைப் பயணம் தொடர்ந்தாலும் அத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும், ஆன்லைனில் ஆன்மீக சொற்பொழிவாற்றுவதை மட்டும், நித்தியானந்தா நிறுத்தவில்லை. சர்ச்சை மேகங்கள் தன்னை சூழ்ந்திருப்பது குறித்து சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் கொஞ்சம் ஜாலியாக பேசியிருக்கிறார், நித்தியானந்தா. தாம் பேசும் தமிழ் யாருக்குமே புரியவில்லை என கிண்டலடித்திருக்கும் அவர், அதை புரிந்து கொள்ளாமல் காவல்துறை வழக்குப்பதிவு செய்துவிடுவதாக ஒருமையில் எள்ளி நகையாடியிருக்கிறார்.

காவல்துறையையே கலாய்த்துவிட்டு சிரிப்பு பொங்க பேசியிருக்கும் நித்தியானந்தா, தமிழகத்தில் ஏதேனும் ஒரு பிரச்னையை மடைமாற்ற வேண்டுமென்றால், அதற்கு தாம் மட்டுமே குறிவைக்கப்படுவதாக கூறி, பல புதிர்களை போட்டிருக்கிறார்.

பல சர்ச்சைகளுக்கு மவுனத்தையே பதிலாக அளித்துவந்த நித்திய‌னந்தா, இம்முறை மவுனம் கலைத்திருக்கிறார்.