தமிழ்நாடு

மற்றவர்களுக்கு உதவிவிட்டு நெருப்பில் கருகிய நிஷா...!

மற்றவர்களுக்கு உதவிவிட்டு நெருப்பில் கருகிய நிஷா...!

Rasus

காட்டில் தீ மளமளவென பரவியபோது தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மற்றவர்களுக்கு வழிகாட்டிய நிஷா, 100 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்திருக்கிறார்.

சென்னை வேளச்சேரியை பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ஒளி. இவரது மகள் நிஷா தமிழ்ஒளி. வயது 30. ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார். ஐ.டியில் வேலைபார்த்து வந்தாலும் கூட, மராத்தானில் பங்கேற்பது, மலையேற்றம் செல்வது என நிஷாவின் கனவு விரிந்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல் அதிக மனிதாபிமானம் கொண்ட நிஷா என்ஜிஓவாகவும் செயல்பட்டு வந்திருக்கிறார். சென்னை டிரெக்கிங் கிளப்பில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். 

மகளிர் தினத்தை முன்னிட்டு டிரெக்கிங் அழைத்து செல்லும் தகவல் அறிந்து நிஷாவும் தனது பெயரையும் பதிவு செய்து கொண்டு அவரும் டிரெக்கிங் சென்றிருக்கிறார். அங்கு தீ மளமளவென பரவியபோது தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மற்றவர்களுக்கு வழிகாட்டிய நிஷா, 100 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்திருக்கிறார். “வனப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான தீயினால் ஒவ்வொருவரும் திசைத் தெரியாமல் ஓடியிருக்கின்றனர். அப்போது நிஷா நினைத்திருந்தால் தப்பித்திருக்க முடியும். ஆனால் நிஷா மற்றவர்களை காப்பாற்றும்பொருட்டு அவர்களுக்கு உதவியிருக்கிறார். பின்னர் அவர் தப்பிக்க நினைக்கும்போது நெருப்பு நிஷாவை விட்டுவைக்கவில்லை” என நிஷாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நிஷாவின் சொந்த ஊர் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டி ஆகும். எனவே உயிரிழந்த நிஷாவின் உடல் தருமபுரிக்கு எடுத்து செல்லப்பட்டது.