தமிழ்நாடு

நிர்மலா தேவி விவகாரம்: கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்களிடம் விசாரணை

webteam

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி சந்தானம், விருதுநகர் மாவட்டம் தேவாங்கர் கல்லூரியில் இன்று இரண்டாம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அதிகாரி சந்தானம், கல்லூரி முதல்வர், நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்‌களிடம் விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கெனவே கடந்த 20ஆம் தேதி, தேவாங்கர் கல்லூரியில் சந்தானம் விசாரணை மேற்கொண்டார். அப்போது புகார் அளித்த 4 மாணவிகளிடமும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று‌ 2ஆம் கட்ட விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே இந்த‌ விவகாரத்தில் கைதாகி இருக்கும் முருகனிடம் 3ஆவது நாளாகவும், கருப்பசாமியிடம் 2ஆவது நாளாகவு‌ம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ பதிவு வெளியானது. இந்த விவகாரத்தில் ஆளுநரால் அமைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான குழு ஒருபுறமும், மறு புறம் சிபிசிஐடி விசாரணையும் நடந்து வருகிறது.