தமிழ்நாடு

 “கடல் நீரை தூய்மைப்படுத்த‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்” -  வெங்கையா நாயுடு 

 “கடல் நீரை தூய்மைப்படுத்த‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்” -  வெங்கையா நாயுடு 

webteam

நாட்டில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கடல் நீரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார். 

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 25ம் ஆண்டு விழா சென்னை பள்ளிக்கரணையில் நடைபெற்றது. இதில் இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெள்ளிவிழா சிறப்பு தபால் தலையை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து, பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் முன்னறிவிப்பு குறித்த புத்தகத்தை வெளியிட்டார். 

பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு, நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சமாளிக்க கடல்நீரை தூய்மைப்படுத்தும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.