நீலகிரி மாவட்டம் குன்னூர் கரிமொரா கிராமம் பகுதியில் இன்று காலை உலாவந்த காட்டு யானைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு கடந்த வாரம் வந்த 9 காட்டு யானைகள் கல்லார், பர்லியார், ரன்னிமேடு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீருக்காக முகாமிட்டிருந்தன, இந்நிலையில் நேற்று சின்னகரும்பாலம், கிளன்டேல், ரண்ணி மேடு போன்ற பகுதியில் முகாமிட்டிருந்த இந்த யானை கூட்டம், சின்னக்கரும்பாலம் வழியாக கரிமொரா கிராமத்தில் உள்ள தேயிலை எஸ்டேட்களில் இன்று காலை உலாவந்தன,
கடநத ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதிக்கு வந்த இந்த யானை கூட்டம் கேத்தி பகுதியில் ஒருவரை தாக்கிக் கொன்றது, அதன் பிறகு தற்போது மீண்டும் வரத் துவங்கியதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குடியிருப்பிற்கு மிக அருகில் சுற்றி வரும் இந்த யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.